குழந்தைகள் தினம் (கவிதை)

ரோஜா மலரை மார்போடு
      ராஜா போலே சூடியவர்
தேசத்திற்காய் போராடி
       தியாகம் செய்த செம்மலவர்

பதினான்கு நவம்பர் நன்னாளில்
      பாரத மண்ணில் உதித்தவராம்
பண்பும் பணிவும் ஒருசேர
       பாரில் என்றும் நிலைத்தவராம்

தேசத் தந்தை காந்திமகான்
       தேடிக் கண்ட ஒரு தலைவர்
பாசத்துடனே குழந்தைகளை
       பார்க்கும் நல்ல மனிதரவர்

பாரத தேசப் பிரதமராய்
       பலநாள் முன்னர் இருந்தாரே!
ஆசிய ஜோதி என்றவரை
       அன்புடன் மக்கள் அழைத்தனரே!

குழந்தைகளுடனே மகிழ்வோடு
        குதூகலமாய் பேசுபவர்
குழந்தைகள் தினமே அவராலே
       கொண்டாடுகின்றோம் மனம்போலே.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்