பொங்கல் 2011



பொங்கல் வாழ்த்துக்கள் 

மார்கழிப் பனியாம்    மடமை  ஒழிந்திட
மங்கலத் தாயாம்  தைமகள்   வந்திட

ஆதவன் கிழக்கினில் ஆசிகள் அளித்திட 
அறுவடை நெல்மணி அகத்தினில் நிறைந்திட


மாதவம் இயற்றிய மாடுகள் மகிழ்ந்திட
மாந்தர் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்திட

உழைத்துக் களைத்தவன்   உள்ளம் களித்திட
உறவோடும் நட்போடும்  உண்டு மகிழ்ந்திட

பாடுகள் பட்டவன்   பலனை அடைந்திட
பாமர மக்களின்   பசியும் நீங்கிட

பசித்தவன் வயிற்றுக்கு பானை பொங்கிட
உழைத்தவன் உள்ளத்தின்  உவகை ஒங்கிட

செந்நெல்லும்  கரும்போடும்  செந்தமிழ் மணந்திட
செவிஎங்கும் உழவனின் சிரிப்பொலி கேட்டிட

தையினில் சூரியன்   தரணியை வாழ்த்திட 
தமிழினம் வாழ்ந்திட  தமிழனாய்  வாழ்ந்திடு
                           அன்புடன்
                               இள.புகழேந்தி 


                                                                  பொங்கல் 2010
                       
             








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்