காமக்கவி

கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப 
காமக்கவி சொல்கிறேன் கேள்,

ஒளிவீசி உலவிடும் 
குளிர்நிலா முகத்தினை 
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.

வேல்களை விழியாக்கி 
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு 
கன்னியைப் பாடாதென் நாக்கு. 

வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.

மேகத்தைப் போலாடி 
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.

குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான் வாழ வேண்டும்.

கடல்மீன்கள் போலாடும்
கண்களின் காவலாய்
இமையாக நான்மாற வேண்டும்-என்
இளமைக்கு நீமட்டும் வேண்டும்.

எள்ளுப்பூ கவிழ்ந்ததுபோல்
எடுப்பான நாசியிலே
சுவாசமாய் நான்மாற வேண்டும்-என்
சொர்க்கமே நீயாக வேண்டும்.

வலம்புரிச் சங்காக
வார்த்தெடுத்த கழுத்தினிலே
விரல்களால் கோலமிட வேண்டும்-உனை
வீணையென நான்மீட்ட வேண்டும்.

தாமரை அரும்பிரண்டு
தனங்கலாய் வந்தததில்
முகம்புதைத் தழுதுவிட வேண்டும்-உனை
முழுமையாய் ரசித்துவிட வேண்டும்.

என் சேயை நீசுமக்க
இறைவனே தந்துவிட்ட
உன்வயிற்றில் முத்தமிட வேண்டும்-என்
உயிர்மெல்ல உனதாக வேண்டும்.

வந்தவழி வசந்தவழி
வாயிற்படி என்றுமனம்
கண்டபடி விளையாட வேண்டும்-உன்
காமத்தை வெற்றிகொள்ள வேண்டும்.

ஆழகான கொலுசுகளை
அலங்கரிக்கும் பாதமதன்
ஆதிவரை அழுக்கெடுக்க வேண்டும்-என்
அதரங்கள் அதில்களைக்க வேண்டும்.

சத்தங்கள் இல்லாத
சாமத்தில் உன்னோடு
யுத்தங்கள் செய்துவிட வேண்டும்-பல
முத்தங்கள் செலவாக வேண்டும்.

தித்திக்கும் இதழோரம்
தேந்துளியை சொட்டவிட்டு
திகட்டாமல் முத்தெடுக்க வேண்டும்-என்
திருநாளும் அதுவாக வேண்டும்.

விழிமூடும்  வேளையெலாம் 
வெண்நிலவே உன்நினைவு
கனவாக வந்துவிட வேண்டும்-என்
கவலைகளைக் களைந்துவிட வேண்டும்.

உள்ளத்தில் உலவிவரும்
பொல்லாத ஆசைகளை
உன்னோடு நான்பேச வேண்டும்-உன்
ஊடலில் நான்மகிழ வேண்டும்.

காவிரிக் கரையோரம்
கைகோர்த்து உன்னோடு
காலாற நடந்துவர வேண்டும்-உன்
கணவனாய் நான்வாழ வேண்டும்.

மேகத்தில் மஞ்சமிட்டு
மெல்லிடையாள் உனைவிரித்து
தாகத்தைத் தனித்துவிட்ட வேண்டும்-உன்
தேகத்தை துடைத்துவிட வேண்டும்.

விண்மீன்கள் பறித்துவந்து
வெண்நிலவே உன்முடிக்கு
பொன்மகுடம் சூட்டிவிட வேண்டும்-உன்
பூ உடலை நான் நுகர வேண்டும்.

சோலைக் குயில்களெல்லாம்
சுந்தரியுன் மொழிகேட்டு
சொக்கிமனம் மயங்கிவிட வேண்டும்-உனை
சுவைபார்க்கும் நாளொன்று வேண்டும்.

கடற்கரையில் காற்றுவர
கன்னிமயில் அசைந்துவர 
காதோடு நான்பாட வேண்டும்-பல
காதல்மொழி அதில்கூட வேண்டும்.

ஓடிவரும் சிற்றோடை
ஓரத்தில் உட்கார்ந்து
பாடிவிட பாட்டொன்று வேண்டும்-உன்
பளிங்குமுகம் நான்ரசிக்க வேண்டும்.

அதிகாலை வேளையிலும்
அந்திவரும் மாலையிலும்
அன்பே உன் மடிசாய வேண்டும்-உன் 
அதரங்கள் வருடிவிட வேண்டும்.

வைகறையின் சாரத்தில்
வண்டிசைக்கும் கீதத்தில்
உன்முகத்தில் கண்விழிக்க வேண்டும்-உன்
பெண்மையில் நான்குளிக்க வேண்டும்.

பார்வைக் கலைக்கூடம்
பாடங்கள் மௌனமென
படித்துவிட நெடுநேரம் வேண்டும்-உனை
படித்துவர பலஜென்மம் வேண்டும்.

பூவில் தேனீக்கள்
புத்துணர்வு பெறுவதுபோல்
நானும் தேனெடுக்க வேண்டும்-என்
நறுமலரும் நீயாக வேண்டும்.

பச்சைப் பசுங்கிளிகள்
பாடிவரும் சோலையிலே
இச்சைகளை நாம்தனிக்க வேண்டும்-உன்
உச்சிவரை குளிர்ந்துவிட வேண்டும்.

பந்தலில் படர்ந்துவரும்
பவளமல்லிக் கொடிஎனவே
என்மார்பில் நீபடர வேண்டும்-உனை 
எப்போதும் நான்தாங்க வேண்டும்.

தென்னை மரத்துக்கிளி   
தேடிவரும் சின்னக்கிளி
உன்னிதழைக் கொத்திவிடக் கூடும்-மனம்
பொன்னிதழைக் கொவ்வைஎனப் பாடும்.

சங்கத் தமிழ்மகளுன்
திங்கள் முகம்மலர
சங்கீதம் நான்பாட வேண்டும்-என்
சாரீரம் நீயாக வேண்டும்.

துகில்களைக் களைந்துவிட்டு
துடியிடையாள் உனைஎடுத்து
என்மார்பில் போர்த்துவிட வேண்டும்-உன்னில்
என்னை நான் சேர்த்துவிட வேண்டும்.

துக்கனாங் குருவிக்கூட்டில்
துயிலுறங்கும் கும்மிருட்டில்
உன்னோடு ஊஞ்சலிட வேண்டும்-நாம்
உறங்காமல் உறங்கிவிட வேண்டும்.

தங்கத் திருமுகமோ?
தளிரான ஒருமுகமோ?
திங்கள் ஒளிதன்னை வீசும்-புவி
எங்கும் உன்வாசம் வீசும்.

கோபத்தில் எனைமுறைத்து
குழப்பத்தில் நீயிருக்க
தாபத்தில் தவித்துமனம் வேகும்-உன்
தளிர்மேனி நிறம்மாறிப் போகும்.

வாழை மரம்நிறுத்தி
வஞ்சியுனை அருகமர்த்தி
நாணைப் பூட்டிவிடும் நாளில்-நீ
நானிச் சாய்ந்துவிடென் தோளில்.

காணக்காய் சிறுவீடு
கண்கொல்லாப் பொன்வீடு
உனக்காய் சமைத்துவிடுவேனே-அதில்
உலகைப் படைத்துவிடுமானே.

பிள்ளைமுகம் மெல்ல
பின்தோளில் சாய்கையிலே
கொள்ளைப் போய்விடுமென் மனது-அன்புத்
தொல்லைக் கொடுத்துவிடும் வயது.

நகங்கள் களைந்துவிட்டு
நறுமணத் தைலமிட்டு
யுகங்கள் மாறும்வரை நானும்-உன்
அகங்கள் ஆண்டுவிட வேணும்.

சின்னக்குடை இமைக்குள் 
மின்னும் கண்மீன்கள்
என்னை தினமுரசிப் போகும்-என்
எண்ணம் தீயாக வேகும்.

குளிர்கால இரவில் நீ
குளிர்காயத் தீயாகி
தளிர்மேனி உலர்த்திவிடுவேனே-என்
தாயாக இருந்துவிடு மானே.

காலங்கள் விரைந்தோடும்
கனவுகள் நனவாகும்
கோலங்கள் மாறிவிட நானும்-உன்
தோள்களில் சாய்ந்துவிட வேணும்.

பிஞ்சுவிரல் மெல்ல
பிசையும் சாதத்தில்
கொஞ்சம் பசியாறிப் போவேன்-நீ
நஞ்சைக் கொடுத்தாலும் சாவேன்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்