தோழி!

வழியோரம் நீபோகக் கண்டேன் -இது
வான்மதியின் ஊர்வலமோ என்றேன்.

வான்மதியின் வடிவான முகமும்-செவ்
வரிக்கொவ்வை வனப்பான இதழும்,

கவிபாடச் சொன்னதடி என்னை-இனி
கனவிலேனும் காண்பேனோ உன்னை.

முழுமதியை முகமாக்கிக் கொண்டாய்-உன்
முள்விழியால் எனைமெல்லத் தின்றாய்.

  இதழ்மலர்ந்த போதெல்லாம் நெஞ்சம்-உன்
இதயத்தில் புகத்தேடும் தஞ்சம்.

தனங்களில் முகம்புதைத்து அழவோ?-உன்
தளிர்மேனி சிலைஎன்று தொழவோ?

கண்வீச்சில் சொல்லிவிடு சேதி-என்
காதலுக்கு அதுபோதும் தோழி.

காத்துக்கிடக்கிறேன் சொல்வாயா?-தினம்
கனவில் எனைக்கட்டிக் கொள்வாயா?

இதயத்தில் போராடித் தோற்பேன்-நீ
இல்லையெனச் சொன்னாலும் ஏற்பேன்.
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்