பொங்கல் 2010

பொங்கல்
 
வையமெங்கும் வளர்ந்துவரும்
வன்முறைகள் ஒழியட்டும்,
உயிர்களிடம் அன்புஎனும் 
உணர்வு பொங்கி வழியட்டும்,
 
நிலவுலகில் நேசமுடன்
நீதிஎங்கும் வாழட்டும் ,
நிம்மதியாய் எம்மக்கள்
தன் நாட்டை ஆளட்டும்,
 
தவழ்ந்துவந்த தைமகளால்
தமிழினமே செழிக்கட்டும்,
தரணியெங்கும் தமிழ்மக்கள்
தன்மானம் விழிக்கட்டும் ,
 
ஈழத்  தமிழினமும் இன்னோர் பிறப்பெடுத்து
வாழப்போராடத் துவங்கட்டும்,
பாழும் பாமரனின் பசித்த வயிற்றுக்கு
பச்சை நெல்லரிசி பொங்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்