சுனாமி

 ஆழ்கடல் பசியோ!
ஊழ்வினைப் பயனோ!
நீள்கடல் எழுந்து,
நிம்மதி விழுந்தது. 

வேலியே பயிரை 
வீணடித்த கதைபோல,
கடலன்னை நம்மவரைக் 
கலங்கடித்துக் கொன்றாளே!
  
வலைவீசி மீன்கொண்ட  
கரையோர மீனவரை,
அலைவீசிக் கொன்றாலே
அவள்பசியும் அடங்கியதோ?

 இறந்தோரை வாழ்விக்க 
இனி அவளால் ஆகாது,
இருப்பவரின் மீதேனும்
இரக்கத்தைக் காட்டுவளோ? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்