காதலும் தோற்ற காலம்

உனக்கான உள்ளத்தின்
 சுவையறிவேன் நான்,
என்னை நொந்துகொள்கிறேன்.
தேடக் கிடைக்காத தேவாமிர்தம் 
என் இதழோரம் வழிந்தும்
விழுங்கத்துனியாத எனக்கு வாழ்வெதற்கு?
உன்னை அணைத்துக்கொள்ளத் 
துடிக்கும் உள்ளம் 
வாழ்வில் இணைத்துக்கொள்ள 
மறுப்பதேன்?

உன்னில் எழும் கேள்வி
என் செவிகளைச் செவிடாக்குகிறது. 
உன்னை நேசிக்கத் தெரியாதவன்
ஒரு சடலம்,
உன்னை ரசிக்கத் தெரியாதவன்
ஒரு குருடன்,
உன்னில் வசிக்கத் தெரியாத நான்
ஒரு பாவி.
உண்மையைச் சொல்லவா?
உலகில் உன்னைவிட என்னை 
அதிகம் நேசித்தவர் 
எவருமில்லை.
உனக்கு ஜுரம், தொட்டால்
எனக்கும் வருமென்றாய்
உன்னால் மரணம் வந்தாலும் 
மகிழ்ச்சி என்றேன்.
  என் அப்படி? உன் கேள்விக்கு
ஒரே பதில்தான் உள்ளது.
அது
நானும் உன்னை நேசிக்கிறேன் என்பதே.  
    
 
   
 
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்