பார்வை

 பார்வைக் கல்லெறிந்தாய் 
மனக்குளம் கலங்கிப்போனது.
உணர்வு மீன்கள் 
உயிருக்குப் போராடுகிறது.
 
மௌனம் மருந்துதான் என்றாலும்
மரணத்தை உணர்த்தும் 
மருந்தாக்கினாய் நீ.
காத்துக்கிடக்கும் மார்பில் உன்னை
சாய்த்துக்கொள்ளவும் 
இதழ்களை வருடி 
இலக்கியச் சுவை சொல்லவும்
காலம் வருமென்று கனவு வருகிறது
காதல் சுடுமென்று கவலை வருகிறது.
      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்