இனியவளே!

 எழில் முகம் கண்டேன்
இளமதி என்றேன்
இதயக் கோட்டையின் 
கதவுகள் திறந்தது.

வசந்தத்தின் வரவுதான்
உன் வரவா?
வாடிப்போன மனம் 
துளிர்விட்டது.

வாடைக்  காற்றிடம்   
தூதொன்று சொன்னேன்,
காதில் கேட்காத 
மௌன வார்த்தைகள்.

 விழிஎய்த அம்பினால்
வெட்டுண்ட இதயம்
காதலைச் சிந்தியே
கண்ணீரில் மறையும்.

பன்னீர் வாசத்தில் 
பதில்சொல்ல வருவேன்
பருவச் சிலையுன்னை
பாங்காக பெறுவேன்.

இதழ்தந்து எனைத்தேற்றும்
நாளொன்று வருமோ?
என்விழியும் உன்விழியும் 
கண்ணீரில் விழுமோ?           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்