தாய்

 வீசுகின்ற தென்றலவள் கருணை- மலை 
வீழுகின்ற அருவியவள் கோபம்,
பேசுகிற கிளியின்மொழி வாய்ச்சொல்-தினம்   
பாடுகிற குயிலின்குரல் பாட்டு.

ஊட்டிவிடும் உணவிலொரு பாசம்- தன்
 உடல்வருத்தி எனைவளர்க்கும் நேசம்,
காட்டியவள் சோறூட்டும் நிலவும்-கை
நீட்டியவள் அன்பையே கேட்கும்.

எப்பிழைகள் நான்செய்தபோதும்-அவள்
என்பிள்ளை போலயார் என்பாள்.
கண்டிப்பும் கனிவினிலே கரையும்-அவளைக்
காணாத கண்களும் கண்ணீரில் நிறையும்.

கண்ணாக எனைப்போற்றி வைப்பாள்-ஒரு 
கவலையும் நெருங்காது காப்பாள்,
கண்முன்னே நிற்கின்ற  தெய்வம் -என் 
கனவிற்கும் உயிரூட்டி வைப்பாள்.       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்