தானே புயல்

 காற்றழுத்தம் தானே புயலாச்சு,
கடலெல்லாம் தானே அலையாச்சு,
கரையையும் தானே கடந்தாச்சு,
கடலூரும் தானே பாழாச்சு.

வீடுகள் வெள்ளத்தின் காடாச்சு,
விவசாயம் நீரோடு போயாச்சு,
மின்சாரம் இல்லாம இருளாச்சு,
   மீன்கூட பிடிக்காத நிலையாச்சு.

இருக்கின்ற துன்பங்கள் போதாதா?
இனிமையாய் நாம்வாழக் கூடாதா?
நடக்கின்ற வழியெல்லாம் தண்ணீரா?
நம்மக்கள் சிந்திவிட்ட கண்ணீரா?

தானேபுயல் வந்ததால் தானே,
தமிழ்மக்கள் உள்ளங்கள் வீணே,
நொந்து தினம் வாடிடுது தானே,
நோவு வந்து சாகாதோ? தானே
    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்