மனவாழ்த்து

இல்லறம் என்னுமோர்
 இனியநீரோடையில்,

புள்ளிமான் இரண்டு 
புனலாடி மகிழ்ந்து,

தாம்பத்திய வாழ்வினில்
தழைத்திடத்தான்- இன்று

தரணியில் இறைவனே 
வரம்கொடுத்தான்.

இறைவனோடு என்னுள்ளம்
தான் வாழ்த்த- இந்த 

இயற்கையின் எழிலெல்லாம் 
தாலாட்ட- இன்று

கண்ணனைச் சேர்ந்ததோர்
கோகுலம்- இதை

கண்டென்றும் வாழ்த்தட்டும்
அகிலம்.
            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்