கடல்

 உலகினில் பெரியவள் நீயே-உணவு
உப்புக்கும் நீயேதான் தாயே!
உண்ண  மீன்தந்து பசியாற்றினாய்-அலை
ஊழியாய் உயிர்களை பலியாக்கினாய்.

பலவகை உயிர்களின் தாயாகிறாய்-பெரும்
பலத்தோடு சிலபோது பேயாகிறாய்.
வான்நீல நிறம்காட்டும் கண்ணாடியே-இவ்
வையமும் சிறிது உன் முன்னாடியே.

உன்னுள்ளே வாழ்ந்திடும் உயிர்கள்பல-இவ்
உலகினில் மனிதர்போல் குணங்கள் பல,
மண்ணோடு விண்ணையும் இணைத்தாய்-வான்
மழைநீர்க்கு  புத்துயிர் கொடுத்தாய்.
 
 கரையோர நண்டுகள் கண்டு -யாம்
கவலைகள் மறந்தது உண்டு.
குறையாத செல்வங்கள் உன்னில்-மனித
குளம்வாழ வழங்கிடு மண்ணில்.    
  
 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்