விடுதலை

அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டு
    அனுதினம் ரத்தமாய் கண்ணீர் விட்டு
எண்ணிய எண்ணத்தை சொல்லக்கூட
    எழுந்த தடைகளை தகர்த்துவிட்டு

புண்ணிய பலனாய் பிறந்த எங்கள்
    முன்னய தியாகச் செம்மல் கூட்டம்
திண்ணிய நெஞ்சுரம் கொண்டு நாட்டின்
    கண்ணியம் காத்திட நிமிர்ந்து நின்றார்.

கதரை ஆடையாய் கொண்ட மக்கள்
     காந்திய வழியில் சேர்ந்து நிற்க
நிலையற்ற வாழ்விது என்று எண்ணி
     நிமிர்த்தினார் நேதாஜி ஆயுதத்தை

ரத்தத்தை சிந்தியே சோர்ந்து நின்றும்
    சத்தியாகிரகத்தை சார்ந்து வென்றும்
பெற்றதோர் விடுதலைப் பேணிக்காக்க
    பெரியோரின் வழிகளை நாடி நிற்போம்.
                                                           - இள.புகழேந்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்