சுட்டித் தம்பி

சுட்டித் தம்பி குட்டிப் பாப்பா
    எல்லோரும் ஒன்னா வாராங்க
கட்டிக் கரும்பாம் கனியாம் தேனாம்
    கல்வியை கற்றிடப் போறாங்க

துள்ளிச் செல்லும் புள்ளி மானாய்
    துடிப்புடன் கற்றிட வாராங்க
பள்ளி சொல்லும் பாட்டும் கதையும்
    பாங்காய் பெற்றிடப் போறாங்க

படிப்புடன் பேச்சும் பட்டும் திறனும்
     அடிப்படை எல்லாம் கற்பாங்க
பாரினில் சிறந்த பாரத நாட்டில்
     பண்பின் தூண்களாய் நிற்பாங்க

நாடும் உயர்ந்து நாமும் உயர
     நல்வழி எல்லாம் சொல்வாங்க
நாளைய உலகில் யாவரும் போற்றிட
     நலமுடன் வாழ்வில் வெல்வாங்க.
                                                     - இள.புகழேந்தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்