ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து 

அகரம்  சொல்லிக்  கவிபாடும்,
ஆசிரியன் புகழ் புவிபாடும்,
இளைய தலைமுறை அறிவுபெற,
ஈண்டு பல்வேறு முறைதேடும்.

உண்மை அன்பும் நல்லறிவும்,
ஊரும் உலகும் பெற்றிடவே,
எண்ணும் எழுத்தும் பயில்வித்து,
ஏற்றம் பெறவே போராடும்.

ஐயம் நீங்கிய சிந்தனையும்,
ஆயிரம் சூரியப் பேரொளியும்,
 ஒவ்வோர் உள்ளமும் கண்டுணர,
 ஓங்கிய கலங்கரை விளக்கமென,

ஔவையின் முதுமொழி வழியினிலே,
ஆங்கோர் மேதை உதித்ததினம்,
ஆயிரம் செல்வமும் பெற்றிங்கு,
ஆசிரியர் வாழ வாழ்த்துகிறேன்...
                                   அன்புடன் 
                                          இள.புகழேந்தி
                                                    5/9/2018
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்